search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூண்டி கலைவாணன்"

    திருவாரூர் தொகுதி மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் கலைஞர் மீதான பாசத்தை வாங்க முடியாது என்று பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection #DMK #PoondiKalaivannan
    சென்னை:

    திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. பின்னர் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் அங்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கலைவாணன், அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

    பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பூண்டி கலைவாணன் கூறியதாவது:-

    திருவாரூர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அங்கு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கலைஞர். நாம் அனைவரும் விரும்பாத ஒரு சூழ்நிலையில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இடைத்தேர்தலில் நிற்கும் வாய்ப்பினை எனக்கு வழங்கியதற்கு தலைவர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞருக்குக் காணிக்கையாக மக்கள் அளிக்கும் வாக்குகளைப் பெற்று, மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

    “முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலோடு தேர்தலை எதிர்கொள்வோம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் திருவாரூரில் கலைஞரின் மீது மக்கள் வைத்திருக்கும் பாசத்தை எவரும் விலை கொடுத்து வாங்க முடியாது.

    அ.தி.மு.க, அ.ம.மு.க. இரண்டையும் நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. ஏனெனில் இரண்டு அணிகளும் ஒன்றாக இருக்கும்போது,  கலைஞர் 68,366 வாக்குகள் அதிகமாக வாங்கினார். தற்போது தலைவர் இல்லையே என்பதைத் தவிர எங்களுக்கு வேறு எந்த சவாலும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection #DMK #PoondiKalaivannan

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. #ThiruvarurByElection #DMK #PoondiKalaivanan
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ம் தேதி கடைசி நாளாகும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளுக்கு விடை தருவதாக அமையும். 

    குறிப்பாக தேர்தல் கூட்டணிக்கு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக திருவாரூரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, சாகுல் அமீதை தனது வேட்பாளராக நாம் தமிழர் கட்சி அறிவித்தது. 

    இதற்கிடையே, அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என டி.டி.வி. தினகரன்  இன்று பிற்பகல் அறிவித்தார். 

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க., தி.மு.க.  கட்சிகள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் தொகுதியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னை வந்து விருப்ப மனு கொடுத்தனர்.



    தி.மு.க.வில் நேற்று மட்டும் 28 பேர் விருப்ப மனு கொடுத்தனர். நிறைய பேர் மு.க.ஸ்டாலின் போட்டியிட கூறி மனு கொடுத்தனர். திருவாரூரைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் உதயநிதியை வேட்பாளராக நிறுத்த கோரி மனு அளித்தனர். இதனால் தி.மு.க. சார்பில் யார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில்  தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. விருப்ப மனு கொடுத்தவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் மூத்த தலைவர்களும் நேர்காணல் நடத்தினர்.

    நேர்காணலுக்கு பிறகு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. 

    பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். #ThiruvarurByElection #DMK #PoondiKalaivanan
    ×